Skip to main content

Posts

Showing posts from November, 2022

Education For Parents

                                                      Education For Parents           நாம் ஒவ்வொருவரும் நமது குழந்தைகளின் கல்வி,அதற்குத்   தேர்தெடுக்கும் பள்ளி போன்றவற்றைப்   ,பார்த்துப்   பார்த்து ஆலோசித்து தேர்ந்தெடுக்கிறோம் .           அந்த காலத்தில் பள்ளிக்கும், பாடசாலைக்கும் அனுப்பியது அறிவு வளர்ச்சிக்கும் , வாழ்க்கை கல்விக்கும்.ஆனால் தற்போது   பாடப் புத்தகத்திலுள்ள பாடங்களையே நம் குழந்தைகளுக்கு முழுமையாக போய்   சேர்வதில்லை.இதைப்பற்றி மற்றொரு தலைப்பில் காணலாம். கல்விப் பற்றி பேசிவந்தோம் .......           தற்போதைய காலக்கட்டத்தில் குழந்தைகள் கல்வி பயிலுவதோடு ,பெற்றோர்களாகிய நாம் வாழ்க்கை கல்வி கற்பது மிகவும் அவசியம்.பெரும்பாலான பெற்றோர்கள் தங்களுக்கு எது தோன்றுகிறதோ ,அதை தான் தங்கள் குழந்தைகளுக்கு சொல்லி கொடுக்கிறார்கள், அது நேர்மையானதா ,நல்லதா என்றெல்லாம் பார்ப்பதில்லை.அதையே குழந்தைகளும் பிரதிபலிக்கிறார்கள் ,நல்லது கெட்டது என்று தெரியாமலையே.இது கவலைத்தரும் விஷயமில்லயா???           அதுவும் வேலை செல்லும் பெற்றோர்களுக்கு ,அவர்கள் குழந்தைகளிடம் பேசவே நேரம் கிடைப்பதில்லை. அவர்

வண்ணத்துப்பூச்சியின் வாழ்க்கை சுழற்சி

                     வண்ணத்துப்பூச்சியின் வாழ்க்கை சுழற்சி   என்னுடைய தனிப்பட்ட கருத்தை இங்கு பதிவு செய்ய விரும்புகிறேன் . நான் ஒரு ஆசிரியராக இருந்து முதல்வராக பணியாற்றி ஓய்வுப் பெற்றவள். இது பெற்றோருக்கு – எனக்கு தற்போதுள்ள பெற்றோர்களை காணுகையில் , ஒரு புறம் மகிழ்ச்சியாகவும் ,மறு புறம் கவலையாகவும் உள்ளது . காரணம்- தற்போது உள்ள பெற்றோர்களைப் போல் அப்போது என் வயதொத்த சகோதர சகோதரிகளுக்கு ஆதரவாகவும்,என்ன சொன்னாலும் நம்பும் பெற்றோர் அமையவில்லை .ஆனால் அது தான் என்னவோ ,எங்களால் இன்றும் வாழ்க்கையில் பலதடைகள் வந்தாலும் ,தாங்கி ,ஏற்றுக்கொண்டு ,எழும் நேரத்தில் எழுந்து ,பணியும் நேரத்தில் பணிந்து ,தைரியமாக ,நம்பிக்கையுடன் கையூன்றி சாதித்து வெற்றிப் பெற முடிந்ததோ என்னவோ . போகட்டும் தலைப்புக்கு வருவோம் . நம் பலருக்கு தெரிந்த வண்ணத்துப்பூச்சியின் பரிமாணங்கள். முதல் நிலை : முட்டைகளாக (eggs ) இரண்டாம் நிலை : புழுவாக (caterpillar ) இக்கட்டத்தில் இப்புழுக்கள் இலைகளை கொறித்துக்கொண்டே இருக்கும் ,அதற்கு சாப்பிடுவது மட்டுமே வேலை . மூன்றாம் நிலை : pu pa   இந்நிலையில் அது தன்னை சுற்றி ஒ

என் பதின்ம வயது பொங்கல் கொண்டாட்டம்

                         என் பதின்ம வயது பொங்கல் கொண்டாட்டம்         பொங்கலன்று எங்கள் வீட்டு gas அடுப்பு       லிவிங் ரூமுல் வாசம் செய்யும்       ஒரு அடுப்பில் பச்சரிசி சாதம்       மற்றொரு அடுப்பில் சர்க்கரை பொங்கல்       அது முடிந்து பொங்கல் ஸ்பெஷல் சாம்பார்       15 அல்லது 17 வகை நாட்டு காய்கறிகள் போட்டு       ஒரு பெரிய இட்லி பானையில் பொங்கல் சாம்பார்       ஆஹா என்ன மணம் , என்ன ருசி        பச்சரிசி சாதத்துக்கு சாம்பார் ப்பா super      மதியம் முடிந்து   மாலை ஒரு ரவுண்டு      முடிந்து ,மறு நாள் என் தாய் பச்சரிசி பானையில்      தண்ணிர் ஊற்றி      மறு நாள் காலை ஒரு கிண்ணத்தில் பழையது –                                   அதில் கெட்டித்தயிர் – தொட்டு கொள்ள      சு ண்ட வைத்த சாம்பார் .      பழையதை பிசையும் போது தயிரில் உள்ள      வெண்ணெய் கையிடுக்கில் ஓட்டும்      கை கழுவியும் தயிரும், சாம்பாரும்     கையை விட்டு போக மறுக்கும்     இப்போது காய்கறிகள் அனைத்தும் போட்டும்     அந்த மணம்     ம்ம்ம்ஹூம் ....... வரவில்லையே ஏன் ???                            

என் இளம் பிராய தீபாவளி கொண்டாட்டம்

                                         என் இளம் பிராய தீபாவளி கொண்டாட்டம்                                       பிள்ளைகள்  ஐவர் இருந்தாலும்            எனக்கு  என் தந்தை எப்போதும்   இரண்டு புத்தாடை            வாங்க தவறியதில்லை.....!!!!             தீபாவளி அன்று எங்கள்   தெருவில் முதலில்             யார் வீட்டில் முதல் பட்டாசு வைப்பது என்று போட்டி நடக்கும்....             விடிய விடிய கண் விழித்து அதிகாலையில் அயர்ந்து            உறங்கி விடுவது வழக்கம் – பின்பு            தந்தையின் குரல் கனைப்பில் எழுந்து            நீராடி புத்தாடை அணிந்து முதல் வெடி            எப்போதும் நாங்கள்தான் வெடிப்போம்.....              பொட்டு   வடிவத்தில் இருக்கும் பொட்டு பட்டாசு              வெடிக்க ஒரு போல்ட் நட் போதும்......            இரண்டு உருளைக்கு நடுவில் பொட்டு பட்டாசு            வைத்து இறுக்கி சுவற்றில் தூக்கி எறிந்தால்               பலத்த சப்தத்தோடு வெடிக்கும்.              பலகாரம்   ,           ஒற்றைப் படையில் 13 அல்லது   15 வகை          பலகாரம் செய்வது வழக்கம்  

மின் தடை(என்கிற) பவர் கட்

மின் தடை(என்கிற) பவர் கட்                      மண்ணெண்ணெய் விளக்கு          லாந்தர் விளக்கு          காடா   விளக்கு – போன்ற மண்ணெண்ணெய் விளக்கு          இல்லாத வீடே இல்லாத அந்தக்காலம் அது...!!!          கரண்ட் கட்.......மின் தடை..பவர் கட்..எப்படி வேண்டுமானாலும் சொல்லலாம்...!!!!!           தெருவில் என் வயது தோழமைகளின்          ஊ...ஊ...வூ..என்ற வெளியில் வந்து விளையாட  அழைக்கும்  கூக்குரல்..அழைப்பு.....!!!  அதுவும்  தூர்தர்ஷனில்  வெள்ளியன்று ஒளியும் ஒலியும்          இடையே மின் தடையென்றால் அவ்வளவுதான் ....மொத்த காலனியும்  சோகத்தில் முழ்கிவிடும்...!!!           தேர்வு  நேரமென்றால்          இரண்டு  லாந்தர்விளக்குகள்– விளக்கைச் சுற்றி          நான் என் உடன்பிறந்தவர்களுடன் புத்தகத்தோடு          படிப்பது போல் இருக்கும்          ஆனால் இல்லை.......!!!!!  என் அப்பாவின்  முறைப்புக்கு   பயந்து , புத்தகம் விரித்து          மட்டும்  வைக்கப்பட்டிருக்கும் .          விளையாட்டை  அண்ணன் ஆரம்பிப்பான் தன் கைவிரலை          நெருப்புக்கு நடுவே அங்குமிங்கும் போகசெய்வான்          நா