Skip to main content

Posts

Showing posts from January, 2023

வாங்க எங்க ஊருக்கு

              வாங்க எங்க ஊருக்கு                     என் சிறு பிராயத்தில்,  ஒவ்வொரு கோடை விடுமுறைக்கும்  , என் தாய் பிறந்த கிராமத்துக்கு செல்வது வழக்கம். கிட்டத்தட்ட ஒன்பது மணிநேரப் பயணம். எங்கள் ஊரை நெருங்கிவிட்டோம் என்று, வயல் வெளியும், நீரோடைகளும் அறிவுறுத்தும். நன்கு அகண்ட நீரோடை, இரு கரைகளிலும் உயர்ந்த தேக்கு மரங்கள். ஊர் நெருங்க நீரோடை சுருங்கிப் போகும்.                    எங்கள் ஊர் பயண வருகை தகவல்,ஒரு வாரம் முன்பே என் தந்தை என் தாத்தா விற்கு கடிதம் மூலம் தெரிவித்து விடுவார். நான்கு தாய்மாமன்கள், எல்லாம் அருகருகே வசிப்பர், அந்த ஊரில் உள்ள வீடுகள் அவர்கள் பங்காளிகள். மொத்தத்தில் ஊரே சொந்தங்கள் தான்.                    பேருந்து அக் குக்கிராமம் செல்லாது, மெயின் ரோட்டிலேயே இறங்கிவிடுவோம். எங்களுக்காக பேருந்து நிறுத்தத்திலேயே கூண்டு வண்டியோடு எங்கள் சின்ன மாமா காத்திருப்பார். எனக்கு நினைவு தெரிந்தவரை விடியற்காலை இறங்குவோம், மாடுகளை அருகிலுள்ள மரத்தில் கட்டி வைக்கோலை போட்டு, அந்த கூண்டு வண்டியிலேயே என் மாமா உறங்குவார் போலும்.                     அந்த கூண்டு வண்டியை பற்றி கூற வ

நான் சந்தித்த மனிதர்கள் - மணிமாறன் அண்ணே

               நான் சந்தித்த மனிதர்கள்                   மணிமாறன் அண்ணே                      எனக்கு அப்போது வயது பத்து இருக்கும், ஏனென்றால் பத்து வயதுக்கு மேல், நான் வெளியே என் அண்ணன்களுடன் சென்று விளையாடிய நினைவு இல்லை. வீட்டுப்படியோடு சரி.                     என் தந்தை பல்கலைகழகத்தில் பணிபுரிந்ததால், நாங்கள் அலுவலர் குடியிருப்பில் ( Staff Quarters)   குடியிருந்தோம். அது மிகவும் சந்தோஷமான நாட்கள் . பெரிய பல்கலைகழகம் என்பதால் மின்சாரம் தனி யூனிட் ஆக செயல்படும், பெரிய பெரிய Transformer கள் இருக்கும். அந்த வயதில் அவையெல்லாம் பூதமாக தெரிந்தது.                     அங்குள்ள EB Point ல்   அவையனைத்தையும் பராமரிக்க ஒரு லைன் மேன் , அவருக்கு உதவ ஒரு உதவியாளர் இருந்தனர். நாம் அந்த உதவியாளரைப் பற்றி தான் பார்க்க போகிறோம். இந்த தொகுப்பின் ஹீரோ அவர் தான். அவரும் தன்னை அப்படி தான் நினைத்துக் கொண்டார்.                     அவர் மணிமாறன், ஒரு 25 வயது மதிக்கத்தக்கவர், குட்டையான உருவம். அவர் ஒரு காக்கி டிரௌசர், மற்றும் ஒரு வெள்ளை மேல் சட்டையுடன் தான் எப்போதும் காணப்படுவார். ஒரு சைக்கிளில் உலா

நான் சந்தித்த மனிதர்கள்- Nanny

                நான் சந்தித்த மனிதர்கள்                                                                            Nanny                                               நான் பணிபுரிந்த இடத்தில், Nanny ஆக திருமதி.சாந்தா   என்ற பெண்மணி பணிபுரிந்து வந்தார். அவரை பற்றி தான் இந்த தொகுப்பில் காணப் போகிறோம்.                    சாந்தா , மெலிந்த கருத்த தேகம், குட்டையான உருவம், பென்சிலைப் போல் மெலிந்த பின்னி போட்ட தலைமுடி. பயந்தும், பதற்றத்துடன் தான் காணப்படுவார். இன்றும் எனக்கு நன்கு நினைவிருக்கிறது. அவர் வேலை கேட்டு பள்ளியின் நுழைவாயிளில்   நின்றிருந்தார்., என்னுடன் பனி புரியும் சக ஊழியர் ஒருவர், “ மேடம், அவங்க ரொம்ப பாவம், எப்படியாவது வேலைக்கு சேர்த்துக் கொள்ளுங்கள்”, என்று கூறினார்.                  நான், intercom   மூலம் செக்யூரிட்டியிடம் ,”அவரை வரச் சொல்லுங்கள் “, என்றேன். ஏற்கனவே உயரம் கம்மி, இதில் மரியாதை நிமித்தமும், எப்படியும் வேளையில் சேரும் தீர்மானத்தில் மிகவும் பவ்யமாக குனிந்து , கை கட்டி, என் அறையில் நுழைந்தார். அவரை காணும் போதே அவரது குடும்ப பொருளாதாரம் தெரிந்தது. அவரின் கதை

என் உயிர் தோழிக்கு.....

               என் உயிர் தோழிக்கு.....           என் உயிர் தோழிக்கு, உன் உயிர் தோழி எழுதுவது. நீ நலமா?, நான் நலம்- என்ற சம்பிரதாய பொய் விசாரிப்புகளை கூறவும், கேட்கவும் விருப்பமில்லை. எனக்கு நன்கு தெரியும், ஒரே இடத்தில் ஒரு சில நிமிடங்கள் உட்கார்ந்தாலும் வலி, நடந்தாலும் வலி, படுத்தலும் வலி, நின்றாலும் வலி. இதில் ஒரு அற்புதமான விஷயம் என்னவென்றால், மெனோபாஸ்   வேறு , கேட்கவா   வேண்டும், எப்ப என்ன நடக்கும் என்ற திக், திக் ஒரு புறம். அப்படியே இருந்தால் சோம்பேறியாகி விடுவோமோ   என்ற பயத்தால் வேலைகளை இழுத்துப் போட்டு செய்வது, அப்புறம் அந்த வலி போக படுத்திருப்பது. ஓடுகிறது, சில சமயம் நகர்கிறது நாட்கள். எதற்காக இவ்வளவு துரிதமாக நேரம் செல்கிறது தெரியவில்ல, எதை நோக்கி நம்மை கொண்டு செல்கிறது தெரியவில்லை. 5௦ க்கு மேல் ,ஏதேனும் சாதிக்க உள்ளதா, இல்லை அவ்வளவுதானா, எத்தனை காலம் நமக்கு விதிக்கப்பட்டுள்ளது, எதுவுமே தெரியவில்லை, ஓடுகிறது நேரம். இந்த நேரத்திற்கு அசதி வராதா , எப்போதுமே சரியாக செயல்படுகிறதே.!!! என்ன தோழி நான் சொல்வது சரிதானே. எனக்கு தெரியும் .நாம் புன்னகைத்த நாட்களை விட, புலம்பிய நாட

காசு பணம் துட்டு மணி ..மணி....

                                                                               காசு பணம் துட்டு மணி ..மணி....             காசு- பல பேர்             வாழ்க்கையில் கானல் நீர்.             பணம் – சில பேரை              பாடாய்   படுத்தும்.              துட்டு – சில பேரது             துயிலை போக்கும்.             மணி – பல பேருக்கு              மாடாய்   உழைத்தாலும் கிடைக்காது.              இப்படி பல பெயர்களில்              உலா வரும் நீ,             உகுந்தவரிடம் செல்வது அரிது.             ஊர் அடித்து உலையில் போடும்             உத்தமரிடமும்,              வெளிநாட்டு வங்கியிலும்             வரவு வைக்க             விழையும் நாணயக்காரரிடமும்.             நாட்டை சீர்குலைக்க             அயராது பாடுபடும்             நல்லவரிடமும்,             தன்னை சார்ந்தவர்கள் அனைவருக்கும்,             பினாமி சொத்துக்களை              பிரித்துக் கொடுக்கும்             வள்ளலிடமும்,             கருப்பு பணத்தை             வெள்ளை பணமாக மாற்றும்              வெள்ளை மனம் கொண

தொடர்வண்டி பயணம்

       தொடர்வண்டி பயணம் தொடர்வண்டி , ஒரு அருமையான பயண ஊர்தி. களைப்பில்லாமல் களிப்போடு பயணிக்கலாம். அதுவும் ஜன்னலோரப் பயணம்- ஆஹா அற்புதம். முன்பதிவு செய்ததால், சற்றும் பதட்டமில்லாமல், எனக்கான ஜன்னலோரம் இருக்கையில் அமர்ந்தேன், அதுவே பெரிய சாதித்த உணர்வை தந்தது. ரயில் நிலைய சலசலப்பு சற்று எரிச்சலடைய வைத்தது. அறிவிப்புகள் வந்த வண்ணம்   இருந்தது. நான் ஏறியதால் , அந்த அறிவிப்பும் அவசியமற்றதாக தோன்றியது. இந்த ரயில் தான் இந்த நிலையத்திற்கே கடைசி போல சிறு வியாபாரிகள் அவசர அவசரமாக தங்கள் பொருட்களை விற்பதில் தீவிரம் காட்ட, தேவையான தின்பண்டங்கள், உணவு, மற்றும் நீர் இருப்பதை என் பையைத் தொட்டு உறுதி படுத்திக் கொண்டு, ரயில் நகர்ந்து வேகமெடுக்க ஆவலாக இருந்தேன். வீட்டிலும், வரும் வழியிலும், ரயிலுக்கு காத்திருப்பிலும் சொல்ல நேரமில்லாத விஷயங்களை, அவசர அவசரமாக ஜன்னலோரமாக நின்றுக் கொண்டு, பயணம் செய்யப்போகும் , தன் மனைவியிடம் அவளது கணவன்   அளவளாவிக்   கொண்டிருந்தார். எனக்கு சிரிப்பு வந்தது, வீட்டில் இருக்கும் போது முகம் கொடுத்து கூட பேச மாட்டார்கள், இப்போது பார்க்கும் போது ஆத்மார்த்த தம்பதி போல் பா வன