Skip to main content

Posts

Showing posts from February, 2023

நான் சந்தித்த மனிதர்கள் : பயம் களைவாய் மகனே

                       நான் சந்தித்த மனிதர்கள்           பயம் களைவாய் மகனே           நான் ஒரு தனியார் மேல்நிலை பள்ளியில், ஆசிரியராக பணியாற்றி வந்தேன். அந்த சமயத்தில் நடந்த ஒரு நிகழ்வை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். இந்நிகழ்வு தற்போது பயிலும் 1௦ மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவ, மாணவியர்க்கும், பெற்றோர்களுக்கும் உதவியாக இருக்கும் என நம்புகிறேன்.                  அது ஒரு பெரிய தனியார் பள்ளி, 1௦ மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் தனியாக ஒரு Block. எந்தவித இடையூறு இல்லாமல் தனியாக இருக்கும். அந்த சமயம் தனியார் பள்ளிகளுக்கு நடுவே 1௦ மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளில் , எந்த பள்ளி முதலிடம், அப்பள்ளியின் பெயர் தொலைகாட்சியில் இடம்பெற வேண்டும் என்ற பலத்த போட்டி நிகழும்.                 அதனால் பள்ளி நிர்வாகம் , மேல்நிலை ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவியர்க்கு மிகுந்த அழுத்தம் கொடுப்பது வழக்கம். அதுவும் அந்த பள்ளி நிறைய மாணாக்கர்களை கொண்ட பள்ளி. ஆதலால் , ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு ஒவ் வொரு வருடமும் பெரிய challenging காண வருடமாக   இருக்கும்.                  நன

நான் சந்தித்த மனிதர்கள் எண்ணம் போல் வாழ்வு

                நான் சந்தித்த மனிதர்கள்                 எண்ணம் போல் வாழ்வு                   எனக்கு அப்போது வயது 21 இருக்கும். நான் இளநிலை படிப்பு முடிந்தவுடன், அந்த நகரில் ஒரு பெரிதும் பேசப்பட்ட தொண்டு நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தேன். எனக்கு ஒரு மூன்று மாதம் பயிற்சி வழங்கப்பட்டது. பின்பு என் வீட்டிலிருந்து ஒரு 5 km தொலைவில் உள்ள அவர்களது கிளை தொண்டு நிறுவனத்தில் பணி   அமர்த்தினார்கள்.                 அந்த தொண்டு நிறுவனமானது கிராமப்புற பெண்களுக்கு சுய உதவி குழுக்கள் அமைத்து, அரசு திட்டங்களான IFAD, NABARD போன்ற SCHEME மூலம் அவர்களுக்கு கடன் உதவி செய்வது, சரியான பயனாளிகளை தேர்ந்து எடுத்துக் கொடுப்பதே எங்களின்   வேலை.                 நான் CO –ORDINATOR ஆக பணியை துவங்கினேன். அது ஒரு புது அனுபவம், கிராமம் கிராமாக சென்று அவர்கள் நியமித்த சுய உதவி குழுவின் மாதாந்திர கூட்டத்திற்கு சென்று அவர்களின் சேமிப்பை நெறிபடுத்த வேண்டும். எனக்கு ஒரு 22 குழுக்கள் ஒதுக்கப்பட்டது.                 தினமும் காலையில் அலுவலகத்திற்கு வந்து paper work முடித்துவிட்டு ,குழுக்களின் ஊக்குனர்களை ( Animators

நான் சந்தித்த மனிதர்கள் தாயுமானவன்

                                                நான் சந்தித்த மனிதர்கள்                                          தாயுமானவன்               Cashier பூபாலன் சார், ஒரு தனியார் கல்லூரியில் பணிபுரிகிறார். ஒரு 35 – 4௦ வயது இருக்கும் குட்டையான சிவந்த உருவம், சற்று பருமனாக இருப்பார். எப்போதும் பளிச்சென்ற உடை, ஒரு கருப்பு பிரேம் போட்ட கண்ணாடி. இதுவே அவரது அடையாளம்.                குறித்த நேரத்தில் வேலைக்கு தன் Vespa வில் ஆஜராகிவிடுவார். எப்போதும் சிரித்த முகம். அவர் கோபப்பட்டு நான் பார்த்ததில்லை. அவருடைய மாணவி மிகவும் அழகானவர் . அவர் ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். இருவரும் அவ்வளவு அந்நியோனியமாக இருந்தனர். திருமணமாகி 12 வருடங்களுக்கு பிறகு அவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது.                 தன் மனைவியை பிரவசத்திற்கு கூட அவர் தன் மாமனார் வீட்டுக்கு அனுப்பவிரும்பவில்லை, காரணம் தானே தன் மனைவியை அருகிலிருந்து கவனித்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம்.                 அந்த சமயத்தில் அவருடைய ஒரே அக்கா ,கணவனை இழந்து நிற்க நேர்ந்தது. அவரை தன்னுடனே வைத்து பார்த்துக் கொண்டார்.

. நான் சந்தித்த மனிதர்கள் சுமைதாங்கி சுமதி

              நான் சந்தித்த மனிதர்கள்                                                          சுமைதாங்கி சுமதி                சும்மா சொல்லக் கூடாது, சுமதி போன்ற ஒரு இடிதாங்கி இல்லை இல்லை   சுமைதாங்கியை நான் என் வாழ்வில் சந்தித்ததில்லை. அவளது திருமண வாழ்வில் நிகழ்ந்த   ஒவ்வொரு நிகழ்வும் இடி போன்றது. அதை அவள் எப்படி ஏற்று வாழ்ந்தாள்   என்று நினைத்து நான் வியந்ததுண்டு.                  சில நேரங்களில் அல்ல பல நேரங்களில் இவள் Masochist ( விரும்பி வலியை ஏற்பவர்) சேர்ந்தவள் போல் எனத் தோன்றும். இப்படியே அழுது முடியப் போகிறது அவள் வாழ்க்கை என்று நினைக்கையில் , சமீபத்தில் அவள் எடுத்த முடிவு என்னை   வியக்க வைத்தது.                  அட நம்ம சுமதியா   இவள் பார்றா ... என்று வியந்து போனேன். வாங்க ஒரு சிறு பயணம் மேற்கொள்வோம் சுமதியின் வாழ்க்கைக்குள்......                   எனக்கு சுமதியை சிறு வயதிலிருந்து பரிச்சியம். ஒரு நடுத்தர குடும் பத்தை சேர்ந்தவள். பாராட்டி, சீராட்டி வளர்க்கப்பட்டாள் , தன் மனதில் பட்டதை பட்டென்று கூறுபவள். எதற்கும் பயந்ததில்லை, ஆனால் தோழிகள் என்று கூறுமளவிற்கு அவளுக்கு