Skip to main content

Posts

களவும் கற்று மற

                                    களவும் கற்று மற                      இந்த தலைப்பிற்கான விரிவாக்கம், திருட்டு தொழிலை கூட கற்றுக் கொண்டு, மறந்து விடு என்பதே ஆகும்.                     இந்த தலைப்பின் மூலம் , நான் உணர்த்த விரும்புவது , தீய செயல்கள் அனைத்தையும் தெரிந்து கொள்ளுதல் அவசியம். அப்போது தான் இந்த உலகில் நாம் வாழ முடியும். மிகவும் நல்லவர்களாகவும், தீய செயல்கள் பற்றி அறியாமல் இருப்பதால், இவ்வுலகில் அனுதினமும் எதாவது ஒரு வகையில் சூழ்ச்சியில் மாட்டி ஏமாற வாய்ப்புகள் அதிகம்.                      தீய செயல்களை அறிந்து கொள்ளுதல் அவசியம். எப்படியெல்லாம் ஏமாற்றுகிறார்கள், எப்படி cunning காக யோசிக்கிறார்கள், எப்படி இடத்திற்கு தகுந்தாற்   போல் தங்களை மாற்றிக்கொள்கிறார்கள், என்று அறிந்திருத்தல் அவசியம்.                     “எனக்கு இவையெல்லாம் தெரியாது, நான் நல்ல விஷயங்கள் பார்த்தே வளர்ந்துவிட்டேன்”, என்று சொல்லிக் கொள்வது பெருமையல்ல. அதற்கு,” நான் ஏமாளி,” என்ற பலகையை கழுத்தில் மாட்டிக் கொள்வது மேல்.                      நாம் அதற்காக தீய செயல்களை செய்யலாம், என்று அர்த்தமில்லை. நெர

நான் பார்த்து வியந்த வீரப் பெண்மணி இருளாயி

             நான் பார்த்து வியந்த வீரப்பெண்மணி                      இருளாயி                   மதுரை அருகே ஒரு கிராமம், அந்த கிராம ரோட்டிலிருந்து ஒரு சிறு கிளை, வாய்க்கால்   ஒட்டிய பாதை. ஓரு குக்கிராமத்திற்கு அழைத்து செல்லும். இரு புறமும் வயல்கள், அதுவும் முப்போகம் விளையும் நிலங்கள்.                   அக்கிரமத்திற்கு முதலில் நான் சென்ற போது.” நீங்க எதுக்கும் இருளாயியை போய் பாருங்கள்”, என்றனர். ஒரு சந்துக்குள் சென்று ஒரு சிறு பெட்டிக்கடை போல் உள்ள இடத்தை அடைந்தேன். அதன் இரு புறமும் சிமெண்ட் மேடை, கூரை வேய்ந்த காத்தோட்டமான இடம்.                    வெயிலுக்கு இதமாக இருந்தது, உட்க்கார்ந்த அடுத்த கணம் குடிக்க ஒரு குட்டை பாவாடை, சட்டை போட்ட ஒரு பெண்   சொம்பில் குடிநீருடன்   வந்தாள், “இந்தாங்க அக்கா, இத குடிங்க நான் ஆத்தாவ கூப்பிடுறேன்”, என்றப்   படி பதிலுக்கு எதிர்பார்க்காமல் ஓடினாள்.                     சொம்போடு சுற்றிப் பார்த்தேன் ஆங் ஆங்கே கூரை மற்றும் ஓட்டு வீடுகள், என்னைப் பார்த்ததும்,” இருளாயியை பார்க்க வந்தீங்களா?”, என்று கேட்டப் படி சென்றனர். நான் அவர்கள் கொடுத்த பில்ட் அப்ப

மனிதம் காப்போம்

               மனிதம் காப்போம்                 மனிதம் என்பது , நம் பகுத்தறிவின் மூலம் சிந்தித்து செயல்படும் தன்மை. பிற மனித வாழ்விற்கு நாம் நம்மை பயனுள்ள வகையில் இருத்திக் கொள்வதே,  தலைப்புக்கான அர்த்தம்.                 சுருக்கமா சொல்லனும்னா , நம்மை பிறர் எப்படி நடத்த வேண்டும் என்று விரும்புகிறோமோ, அது போல் நாமும் பிறரை எதிர் கொள்ள வேண்டும். முதல் பத்தியில் , “ பிற மனித வாழ்விற்கு நான் நம்மை பயனுள்ளதாக...... என்ற வாக்கியத்தை மறந்து விடுவோம், காரணம் முதல் வரியை செயல் படுத்த முயலுவோம், பின்பு அதை பார்க்கலாம். இந்த மனிதம் என்பதை பின்பற்றுகிறோமா என்பதைப் பற்றி பார்ப்போம்.                 நம் வீட்டில் உள்ள ரத்த பந்தங்கள், உறவினர்கள், நண்பர்கள், அண்டை வீட்டார்- இவர்கள் அனைவரிடத்தும் நாம் மனிதம் காக்கிறோமா?. இல்லை என்று தான் சொல்வேன் , நான் உட்பட.                 நாம் முன்பு நம் பெற்றோர்கள் வாழ்ந்த காலத்தை நினைத்துப் பார்ப்போம் , பெரிய கூட்டு குடும்பம், சுற்றி சொந்த பந்தங்கள், நல்லது கெட்டது என்றால் நாட்கள் கணக்கில் அவர்களோடு பயணிக்க நேரிடும், பரஸ்பர உதவி, குடும்ப பாரம்பரியம், குலம்

என் தங்கத்துக்கு ஒரு தாலாட்டு

        என் தங்கத்துக்கு ஒரு தாலாட்டு          கண்ணே ,என் கனியமுதே !          கட்டிக்   கரும்பே கவலையின்றி          கண்மூடி உறங்கு          காலம் நிறைய கிடக்கு          கண்ணீர்விட – இப்போது           கவலை கலைந்து கண்ணுறங்கு. - உன்          துயரம் துடைக்க நான்          துணையிருப்பேன் துவளாதே          துணிவுடன் செயல்பட காலம் கிடக்கு          துயில் கொள்வாய் என் தூரிகையே.- உன்          தொடர்வண்டி பயணத்தில்          தொல்லைகள் பல காத்திருக்கு- அதில்          தொலைந்து போகாமல் இருக்க நான்          தொடர்ந்து வருவேன்          தூங்கு என் மயிலிறகே .           அத்தை அடித்தாளோ , மாமன் அடித்தானோ          தாத்தா , பாட்டி அடித்தார்களோ- என்று          தாலாட்டு பாட விரும்பவில்லை- காரணம்          யாரும் துனண   வர மாட்டார்கள்- ஆதலால்          தாய் நான் சொல்கிறேன் அயர்ந்து          தூங்கு என் ஆசை மகளே.           பள்ளி செல்லும் காலம் வரும்,          பல துன்பங்கள் தேடி வரும்,          பயந்து விடாதே, பல         பருந்துகளிடமிருந்து உன்னை நீயே         பாதுகாத்

நான் சந்தித்த மனிதர்கள் செய்யும் தொழிலே தெய்வம்

              நான் சந்தித்த மனிதர்கள்             செய்யும் தொழிலே   தெய்வம்              என் தந்தை ஒரு பல்கலைகழகத்தில் பணி புரிந்த சமயம், நாங்கள் Staff Quarters ல் குடியிருந்தோம். அந்த Quarters ல் உள்ள வீடுகளுக்கு வாசல் மற்றும் கொல்லைபுறம் இருக்கும். அப்போது பல்கலைகழகத்தில் துப்புரவு பணியாளர்களை நியமித்திருந்தார்கள். ஒவ்வொருவருக்கும் ஒதுக்கி உள்ள லைனில் வந்து கொசு மருந்து அடித்து விட்டு, வீதிகளை சுத்தம் செய்வதே அவர்கள் வேலை.              எங்கள் லைன் க்கு முத்து என்பவர் நியமிக்கப்பட்டிருந்தார். அவருக்கு வயது 5௦ இருக்கும். ஆனால் நாங்கள் முத்தண்ணே என்று தான் அழைப்போம். காலையில் 7 மணிக்கு சைக்கிள் பெல் அடித்தால், அது முத்தண்ணன் தான். ரொம்ப punctual . ஒரு கை வைத்த பனியன், காக்கி டிரௌசர், அவர் சைக்கிளில் ஒரு transistor எந்நேரமும் பாட்டு தான்.              எங்கள் வீட்டின் முன் உள்ள மர   நிழலில் சைக்கிளை பார்க் செய்வார்.வரும்போதே பாட்டோடு தான் வருவர். எப்போதும் சிரித்த முகம், விபூதி பட்டை, குங்குமப் போட்டு , தலையை நன்கு எண்ணெய் வைத்து படிய சீவி இருப்பார். பாட்டை முணுமுணுத்துக்கொண்டே ,

நான் சந்தித்த மனிதர்கள் : பயம் களைவாய் மகனே

                       நான் சந்தித்த மனிதர்கள்           பயம் களைவாய் மகனே           நான் ஒரு தனியார் மேல்நிலை பள்ளியில், ஆசிரியராக பணியாற்றி வந்தேன். அந்த சமயத்தில் நடந்த ஒரு நிகழ்வை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். இந்நிகழ்வு தற்போது பயிலும் 1௦ மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவ, மாணவியர்க்கும், பெற்றோர்களுக்கும் உதவியாக இருக்கும் என நம்புகிறேன்.                  அது ஒரு பெரிய தனியார் பள்ளி, 1௦ மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் தனியாக ஒரு Block. எந்தவித இடையூறு இல்லாமல் தனியாக இருக்கும். அந்த சமயம் தனியார் பள்ளிகளுக்கு நடுவே 1௦ மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளில் , எந்த பள்ளி முதலிடம், அப்பள்ளியின் பெயர் தொலைகாட்சியில் இடம்பெற வேண்டும் என்ற பலத்த போட்டி நிகழும்.                 அதனால் பள்ளி நிர்வாகம் , மேல்நிலை ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவியர்க்கு மிகுந்த அழுத்தம் கொடுப்பது வழக்கம். அதுவும் அந்த பள்ளி நிறைய மாணாக்கர்களை கொண்ட பள்ளி. ஆதலால் , ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு ஒவ் வொரு வருடமும் பெரிய challenging காண வருடமாக   இருக்கும்.                  நன