Skip to main content

நான் சந்தித்த மனிதர்கள் சில நேரங்களில் சில மனிதர்கள்

 

                          நான் சந்தித்த மனிதர்கள்

           

                                      

                     சில நேரங்களில் சில
மனிதர்கள்

                     நம் வாழ்க்கைப் பயணத்தில், நாம் பல் வேறு மனிதர்களை சந்திக்கின்றோம். சில பேர் நமக்கு நல்ல பாடத்தை புகட்டுவர். அதாவது இவரைப் போல் இருக்க வேண்டும் அல்லது இவரைப் போல் இருக்க கூடாது என்று. அது போல் நான் சந்தித்த சில மனிதர்களை நான் இங்கு உங்களுடன் பகிர உள்ளேன்.

                   நான் முதல்வராக பணிபுரிந்த பள்ளியின் பெற்றோர் அவர். நன்கு படித்து ஒரு நல்ல பதவியில் இருப்பவர், அவருடைய மனைவியும் நல்ல பதவியில் உள்ளார். அந்த நபர் மிகவும் அமைதியானவர், நான் சில சமயங்களில் நினைத்ததுண்டு “எப்படி இவ்வளவு அமைதியாக இருக்க முடிகிறது, சிரித்த முகத்துடன் எதிர் கொள்ள முடிகிறது என்று. நமக்கு சாதகமான விஷயமோ அல்லது இல்லையோ எது என்றாலும் சட்டென்று ரியாக்ட் செய்ய மாட்டார். அந்த விஷயத்தை நன்கு உள் வாங்கி process செய்து பின்பு  ரியாக்ட் செய்வார்.

                  நம்மால் இயலவில்லையே, வடிவேல் கூறுவது போல் ,” நமக்கு இன்னும் பயிற்சி வேண்டுமோ”?, என்று நானே எனக்குள் கூறியதுண்டு. அந்த நபரின் மகன் எங்கள் பள்ளியில்  படித்து வந்தான். அவர் பள்ளிக் கட்டணம் செலுத்த வருகையில், தவறாமல் என்னை  வந்து பார்த்து விட்டு போவார். அவரிடம் பேசியப் பின் நிறைய விஷயங்களை எப்படி கையாளுவது என்று சிந்தித்து உள்ளேன்.

                 நான் பணி  புரிந்த பள்ளியில், ஆரம்பத்தில் பெற்றோர் வாகனங்களை , பள்ளி வளாகத்தின் உள்ளே அனுமதித்திருந்தோம், பின்பு மாணவர்கள் மற்றும் பள்ளி வாகனம் அதிகரிக்க கா லையிலும் , மாலையிலும் பெரும்  நெரிசலை சந்திக்க நேர்ந்தது. அதன் காரணமாக பள்ளி நிர்வாகம் , பள்ளி வாகனம் மற்றும் ஆசிரியர் வாகனத்தை மட்டும் அனுமதிக்க முடிவு செய்து. மற்ற வாகனங்களை அனுமதிக்க மறுக்க ஆணை பிறப்பித்தனர். நாங்களும் பின்பற்றினோம். ஆனால் பெற்றோர்களிடம் பெரிய அதிருப்தியை சந்திக்க நேரிட்டது.

               அப்படி இருக்கையில், பள்ளி கட்டணம் மற்றும் புத்தக கட்டணம் செலுத்த அந்த பெற்றோர் பள்ளி வந்திருந்தார். கேட் அருகிலேயே செக்யூரிட்டி அவர் வண்டியை தடுத்து நிறுத்த , அவர் மிகவும் கடுமையாக செக்யூரிட்டி இடம் நடந்து கொண்டார் போலும். கட்டணம் அனைத்தையும் செலுத்திவிட்டு, புத்தகம் வாங்கி என்னை பார்க்க என் அறைக்கு  வந்தார்.

               ஆரமிக்கையில் வழக்கம் போல் பொறுமையாக பேசினார். “ என்ன மேடம், புதுசா ரூல்ஸ் போட்டிருப்பது போல் தெரியுது என்றார்” நான் எங்கள் சிரமத்தை எடுத்து கூறினேன். அனைத்தையும் கேட்டு விட்டு, மற்றவர்களுக்கு ஓகே மேடம் , ஆனால் அதை என்னிடமும் follow பண்ண சொல்லக் கூடாது என்றார். உடனே நான்,” சார் ரூல்ஸ் எல்லாத்துக்கும் ஒண்ணுதான சார் என்றேன்”,

               “அப்ப சரி மேடம் , என் வண்டியில் என் அலுவலக தொகை ஒரு லட்சம் உள்ளது அத்தொகை காணமல் போனால், நீங்கள் தான் பொறுப்பு”, என்றார். எனக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை. சமாதனம் செய்ய முயன்று, அவரை என் அறையை விட்டு வெளியே அழைத்து  வந்தேன்.

               நன்கு பேசிக்கொண்டிருந்த அவர் திடீரென்று நாங்கள் வழங்கிய புத்தகப்  பையை தலையில் வைத்துக் கொண்டு, “சரி மேடம் நான் போய்  வருகிறேன், ரொம்ப நன்றி”, என்ற  படி நடக்கலானார். “சார், சார்” என்று நான் அழைக்க, “அப்புறம் என்ன மேடம் , வண்டிய உள்ள விடமாட்டேன்னு சொல்லிடீங்க என்ன செய்யறது “,என்றார். சற்று நேரத்தில் அவர் நடந்துக் கொண்ட விதம் என்னை  வியப்படையச் செய்தது.

               எவ்வளவு பொறுமை, நிதானம் என்று வியந்து பார்த்த நான், இன்று அவரின் நடவடிக்கையைப் பார்த்து திகைத்துப் போனேன். பின்பு அவரிடமிருந்து புத்தகப் பையை வாங்கிக் கொண்டு அவர் வண்டியை எடுத்து வருமாறு கூறினேன். பின்பு அவர் சென்றார் என்னை  அதிர்ச்சியில் ஆழ்த்திவிட்டு.

               மற்றொருமுறை, நாங்கள் குடும்பத்தோடு வெளியே  சென்றிருந்தோம். அது  ஏதோ ஒரு விசேஷ நாள், நினைவில் இல்லை. அனைத்து ஹோட்டல்களும் நிரம்பி வழிந்தன. பின்பு தேடி ஒரு பெரிய ஹோட்டல் கிடைத்தது, சென்று உணவு ஆர்டர் செய்து அமர்ந்திருந்தோம். ஆனால் உணவு வர தாமதமானது. பொறுமை இழக்கும் தருவாயில் உணவு வந்தது.

               ஒரு வழியாக வந்த உணவை சாப்பிட ஆரமித்தோம். அருகில் உள்ள டேபிளில் ஒரு டிப் டாப் ஆசாமி வந்து அமர்ந்து, அவரது உணவை ஆர்டர் செய்தார். ஆனால் அவருக்கு உணவு வந்தபாடில்லை. இதை கவனித்த நான் , “பார் எவ்வளவு பொறுமையாக உட்கார்ந்துள்ளார், உணவு வர சற்று நேரம் தாமதமே உங்களை கோபம் அடையச் செய்தது, அவரைப் பார்”, என்று என் மகன்களிடம் கூறினேன்.

               என் மகன்களும் எப்படி இவ்வளவு அமைதியாக இருக்கிறார் என்று வியந்துப் போனார்கள். நாங்கள் ஒரு வழியாக கை கழுவ செல்கையில், அந்த நபரிடம் ஆர்டர் பெற்று சென்றவரிடம்  என் கணவர், “சார் அவரிடம் ஆர்டர் வாங்கியதை மறந்துவிட்டீர்களா, உணவு கொண்டு வரவில்லையே “,என்றார். அவர் ஒரு வித சிரிப்புடன் ,” இல்ல சார் ஞாபகம் இருக்கு,” என்றார்.

               என் பெரிய மகன் எப்போதுமே மெதுவாக தான் உணவு உட்கொள்வான்.ஆதலால் நாங்கள் மூவரும் அவனை துரிதப்படுத்திக் கொண்டிருந்த போது, ஒரு சத்தம் கேட்க திரும்பினோம், அருகிலிருந்த நண்பர் வாந்தி எடுத்துக் கொண்டிருந்தார். நன்கு குடித்திருப்பார் போலும், அது தான் அவரது அமைதிக்கான காரணம். இது தெரியாமல் நான் அவரை புகழ்ந்து தள்ளினேன்.

               அப்போது அந்த பணியாளர் வந்து , “ சார், மேடம், இவர் எங்கள் வாடிக்கையாளர் , இது பார் வசதியோட உள்ள ஒரு restaurant . இவர் பாரில் சென்று குடித்து விட்டு இங்கு வந்து வாந்தி எடுத்து பின்பு உணவு உண்ணுவார், இது தெரிந்து தான் , நான் தாமதப்படுத்தினேன்”, என்றார்.

               “மேலும் நீங்கள் குடும்பத்தோடு வந்துள்ளீர்கள், நீங்கள் சென்றதும் அவருக்கு உணவு கொண்டு வரலாம் என்று எண்ணி தாமதப்படுத்தினேன்,” என்றார். என் மகன்கள் என்னைப் பார்த்து “நாங்களும் இப்படி அமைதியா இருக்கவா?”, என்று கேலி செய்தனர். விறுவிறுவென்று வெளியே வந்தோம், பசி மயக்கத்தில் வரும்போது கவனிக்க தவறிய ,” பார் வசதி இங்கு உண்டு “, என்ற வாசகம் CFL வெளிச்சத்தில் எங்களைப் பார்த்து சிரிக்க , நாங்களும் தான்.  





Comments

Popular posts from this blog

அன்புள்ள அப்பாவுக்கு,

  அன்புள்ள அப்பாவுக்கு,               உங்க ஆச மவ பாக்கியம் எழுதுறேன். நா இங்க சுகமா இல்லப்பா. நம்ம ஒத்த புள்ளைய நல்ல இடத்துல கட்டிக்கொடுத்துட்டோம்னு சந்தோஷத்துல இருப்பீங்கன்னு தெரியும். ஆனா நா இதுவரைக்கும் உங்ககிட்டையும், அம்மாட்டயும் சொல்லாத விஷயத்த இப்போ சொல்றேன்.                           எம்மவ பாக்கியம்   கிடைக்க நா பாக்கியம்   பண்ணியிருக்கேன்னு, ஒரு நாளைக்கு நூறு தடவையாச்சம் சொல்வீங்க. இங்க புகுந்த வீட்டுல உங்க பாக்கியம்   பாடாப்படுது.                   நாலு ஆம்பளை புள்ளைங்களுக்கு பிறகு, பிறந்த என்ன, பாராட்டி சீராட்டி வளத்து, படிக்கப் போனா பயலுவ பாப்பாங்க, வயலுக்கு போனா வாடிடுவேன்னு , பொத்தி வைச்சு வளத்து, என்னத்த கண்டீங்க, போங்க முடிஞ்சத சொல்லி என்ன லாபம்.                            தரகர் கொண்டு வந்த வரன்ல, இவன் குடிகாரன், இவுங்க கூட்டு குடும்பம், இவுங்கள பத்தி அப்படி சொல்லிக்கிற மாதிரி இல்ல, இது சரியாவராது, அந்த பையன் சரிஇல்ல, இவன் மாறு கண்ணு, இவன் வழுக்க, இவனுக்கு வயசு அதிகம்யா, என்று வந்த வரன்னை எல்லாம் ஒதுக்கியப்போ நினைச்சேன், அப்பா நம்பள நல்ல இடத்துல தான் கட்டி கொடுக

தொடர்வண்டி பயணம்

       தொடர்வண்டி பயணம் தொடர்வண்டி , ஒரு அருமையான பயண ஊர்தி. களைப்பில்லாமல் களிப்போடு பயணிக்கலாம். அதுவும் ஜன்னலோரப் பயணம்- ஆஹா அற்புதம். முன்பதிவு செய்ததால், சற்றும் பதட்டமில்லாமல், எனக்கான ஜன்னலோரம் இருக்கையில் அமர்ந்தேன், அதுவே பெரிய சாதித்த உணர்வை தந்தது. ரயில் நிலைய சலசலப்பு சற்று எரிச்சலடைய வைத்தது. அறிவிப்புகள் வந்த வண்ணம்   இருந்தது. நான் ஏறியதால் , அந்த அறிவிப்பும் அவசியமற்றதாக தோன்றியது. இந்த ரயில் தான் இந்த நிலையத்திற்கே கடைசி போல சிறு வியாபாரிகள் அவசர அவசரமாக தங்கள் பொருட்களை விற்பதில் தீவிரம் காட்ட, தேவையான தின்பண்டங்கள், உணவு, மற்றும் நீர் இருப்பதை என் பையைத் தொட்டு உறுதி படுத்திக் கொண்டு, ரயில் நகர்ந்து வேகமெடுக்க ஆவலாக இருந்தேன். வீட்டிலும், வரும் வழியிலும், ரயிலுக்கு காத்திருப்பிலும் சொல்ல நேரமில்லாத விஷயங்களை, அவசர அவசரமாக ஜன்னலோரமாக நின்றுக் கொண்டு, பயணம் செய்யப்போகும் , தன் மனைவியிடம் அவளது கணவன்   அளவளாவிக்   கொண்டிருந்தார். எனக்கு சிரிப்பு வந்தது, வீட்டில் இருக்கும் போது முகம் கொடுத்து கூட பேச மாட்டார்கள், இப்போது பார்க்கும் போது ஆத்மார்த்த தம்பதி போல் பா வன

SMART BOY SALEEM

                               SMART BOY SALEEM                                                 நான் தற்போது உங்களிடம் பதியும் பதிவு, நான் முதல்வராக இருந்த தருவாயில் நடந்த ஒரு சுவாரசியமான நிகழ்வு.                     சலீம் ஒரு LKG மாணவன். அவர்கள் வீட்டின் ஒரே செல்லப் பிள்ளை அவனது தந்தை துபாயில் பணிபுரிகிறார். சலீமை LKG சேர்பதற்கு மேள தாளம் மட்டும் இல்லை. அவர்கள் மொத்த குடும்பமும் , அவர்கள் ஏரியா மசூதி தலைவருடன் பள்ளிக்கு வந்திருந்தனர்.                    ஒரு பெரிய தாம்பாளத்தில் பழ வகைகளோடு என் அறைக்குள் வந்தனர். அவர்கள் குடும்பத்தில் அவ்வளவாக படித்தவர்கள் இல்லை போலும், அதனால் தான் சலீமுக்கு இந்த ஆர்ப்பாட்டம். சரி சேரப் போகும் மாணவன் எங்கே என்று கேட்டேன்,”மேடம் அவன் உள்ள வராம அவுங்க அம்மாவோடு கேட் அருகே அழுதுட்டு நிக்கறான்”, என்றார் அப்பையனின் தந்தை.                    எங்கள் பள்ளியில் LKG அட்மிஷன் போடும் மாணவர்களுக்கு ஒரு பரிசுப் பொருள் கொடுப்பது வழக்கம். அதனால் அந்த வருடம் வழங்க உள்ள ஜீப்பை எடுத்துக் கொண்டு நானே கேட் அருகே சென்றேன். அங்கு பெரும் சத்தத்தில் சலீம் அழுதுக் கொண்டி