Skip to main content

ONE DAY TRIP

 


                                    ONE DAY TRIP

                   நான் தற்போது பகிர்வது , என் வாழ்வில் நடந்த ஒரு சுவாரஸ்யமான சம்பவம்.

                   அப்போது எனக்கும் என் கணவருக்கும் 9 -6 PM பணி  நேரம். என் இரு மகன்களும், நான்கு மற்றும் இரண்டாம் வகுப்பு படித்து வந்தனர். அவர்களுக்கு சரியாக எட்டே முக்கால் மணிக்கு பள்ளி வாகனம் வந்துவிடும்.

                   நங்கள் நான்கு குடித்தனம் உள்ள ஒரு காம்பவுண்ட் குடியிருப்பில் வசித்து வந்தோம். எங்கள் வீட்டிலிருந்து சில அடிகள் நடந்து ஓர்  சிறிய பெட்டிக்கடை அருகே அவர்களை நிறுத்துவிட்டு , நானும் என் கணவரும் எங்கள் பணிக்கு செல்வது வழக்கம்.

                   அன்று வழக்கம் போல் கிளம்பி காலை டிபன் மதியம் LUNCH பாக்ஸ் நால்வருக்கும் பேக் செய்து, மாலையில் நான்கு மணிக்கு வரும் அவர்களுக்கு SNACKS  எடுத்து வைத்து விட்டு, மாலையில் வந்து அவர்கள் ஏதுவாக எடுத்துக் கொள்ள வசதியாக வீட்டு சாவியை வழக்கம் போல் ஒளித்து வைத்து விட்டு, அவர்களை அந்த பெட்டிக்கடை அருகே நிறுத்தி விட்டு நாங்கள் சென்றோம்.

                   ஆனால் அன்று அவர்கள் மனதில் வேறு ஒரு திட்டம் ஓடிக்கொண்டிருந்ததை நாங்கள் அறியவில்லை. நாங்கள் இருவரும் சென்றதும் , இவர்கள் யாரும் அறியா வண்ணம், எங்கள் வீட்டு காம்பவுண்ட் பின்புறம் சென்று சற்று நேரம் மற்ற மூவரது குடும்ப தலைவிகள் வீட்டுக்குள் செல்லும் வரை காத்திருந்து ,பின்பு மெதுவாக கேட் திறந்து மாடிக்கு சென்று நிழலான இடத்தில் அமைதியாக அமர்ந்து கொண்டனர்.

                  சரியாக பள்ளி SNACKS TIME ல் , SNACKS சாப்பிட்டு, LUNCH TIME ல் LUNCH முடித்து விட்டு, மாலை சரியாக நான்கு மணிக்கு தயாராகி, பள்ளி  வாகனம் வரும் சமயம் கேட் வழியாக வழக்கம் போல் வந்து வீடு புகுந்துள்ளனர். அவர்களுக்காக  நான் வைத்திருந்த மாலை SNACKS யையும் முடித்திருக்கின்றனர்.

                  ஆனால் மாடியில் இவர்கள் பேச்சுக் குரல் கேட்டு, விஷயம் அறிந்த பக்கத்து வீட்டு பெண்மணி, இவர்களின் திட்டம் அறிந்து ஒன்றும் கேளாமல் அமைதியாக இருந்து விட்டார்.

                 நான் மாலை 6 மணிக்கு பணி  முடிந்து, என் குழந்தைகள் பள்ளி சென்று வந்து கலைத்திருப்பர்களே என்று நம்பி பதட்டத்துடன் குறுக்கு வழியில் உள்ள சோளக் காட்டிற்குள் புகுந்து வீடு வந்தேன். என்னிடம் இவர்களை சேதியை சொல்ல அந்த பெண்மணி கேட் வெளியே காத்திருந்தார். என்னை கண்டதும் என் பிள்ளைகளின் ஹோம்  ட்ரிப் பற்றி கூறினார்.

 

              அவர்களை நம்பி பள்ளி வாகனம் நிறுத்தும் இடத்தில் விட்டு சென்ற எங்களை ஏன் ஏமாற்றினர் என்ற கேள்வியோடு வீடு புகுந்தேன். என் சமத்துப் பிள்ளைகள் மற்ற நாட்களை விட அன்று மிகவும் பொறுப்போடு கொடுக்காத வீட்டு பாடத்தை செய்துக் கொண்டிருந்தனர்.

              அப்போது நான்காவது படித்த என் பெரிய பையன் ஏதோ கொடுத்த HOMEWORK போல் செய்து என்னை ஏமாற்றினான், நம்பினேன். ஆனால் அப்போது இரண்டாவது படித்துக் கொண்டிருந்த ( இப்போது P.H.D படிக்கும்) என் இளைய மகனும் கொடுக்காத HOMEWORK கை எழுதுவது போல் பாவனை செய்தானே, அதை நான் எப்படி நம்பினேன் ??

              இப்போது நினைத்தாலும் என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை. போகட்டும் விஷயத்திற்கு வருவோம். இதில் HIGHLIGHT என்னவென்றால், எப்போதும் அவர்களின் LUNCH BOX LUNCH BAG இல் தான் இருக்கும் , ஆனால் அன்று LUNCH BOX சிங் ல் இருந்தது. அன்றைக்கு பள்ளி செல்லாத ஸ்கூல் UNIFORM வாஷிங் மெஷீன் ல் போடப்பட்டிருந்தது.

              என்னால் கோபத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. என் கணவருக்காக காத்திருந்தேன் .அவரும் வந்தார், ஆனால் அவர்களின் கொடுக்கப்படாத HOME WORK மட்டும் முடியவில்லை. அதைத்தான் என்னால் இன்றும் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.

“யாருமே இல்லாத கடைல, யாருக்குடா டீ ஆத்துறீங்க”, என்று விவேக் சொல்வது போல், அவர்களையே பார்த்துக் கொண்டிருக்க, என் கணவர் பிரெஷ் ஆகி வந்தார், அடுக்களையில் அழைத்துப்போய் செய்தியை சொன்னேன், கோபம் கொள்வார் என்று எதிர் பார்த்த என்னை அவரும் ஏமாற்றினார். சிரிப்பை அடக்க முடியாமல் தவித்தார்.

               இந் நிலையில் பக்கத்து வீட்டு ஆண்டி போட்டுக்கொடுத்து விட்டதை அறிந்த அவர்கள். அடுத்த திட்டத்தையும் கட்சிதமாக தீட்டி வைத்திருந்தனர். மெதுவாக என் இளைய மகனிடம் விசாரிக்க , அண்ணனுக்கு சிக்கன் குனியா வந்து விட்டதால், அண்ணனுக்கு துணையாக தானும் பள்ளி செல்லவில்லை என்பது போல் கூறினான். சரி, நேராக வீடு வராமல் , மாடி சென்றது எதற்கு என்று விசாரித்தால் இன்று வரை பதில் இல்லை.

              தற்போது பெரியவன் B.TECH, MBA முடித்து ஒரு IT கம்பெனியில் பொறுப்பான பதவியில் இருக்கிறான். இளையவன் M.A, முடித்து P.H.D படித்து வருகிறான். இன்று வரை யார் பிளான் போட்டது என்று கேட்டால் பதில் இல்லை, “வேண்டும் என்றால் டைம் மெஷின் மூலமாக போய் பாருங்கள்”, என்று ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டிக் கொள்கின்றனர். இன்றும் அவர்களின் ONE DAY HOME TRIP பை பற்றி பேசி சிரித்துக் கொள்வோம்.

                   

Comments

Post a Comment

Popular posts from this blog

அன்புள்ள அப்பாவுக்கு,

  அன்புள்ள அப்பாவுக்கு,               உங்க ஆச மவ பாக்கியம் எழுதுறேன். நா இங்க சுகமா இல்லப்பா. நம்ம ஒத்த புள்ளைய நல்ல இடத்துல கட்டிக்கொடுத்துட்டோம்னு சந்தோஷத்துல இருப்பீங்கன்னு தெரியும். ஆனா நா இதுவரைக்கும் உங்ககிட்டையும், அம்மாட்டயும் சொல்லாத விஷயத்த இப்போ சொல்றேன்.                           எம்மவ பாக்கியம்   கிடைக்க நா பாக்கியம்   பண்ணியிருக்கேன்னு, ஒரு நாளைக்கு நூறு தடவையாச்சம் சொல்வீங்க. இங்க புகுந்த வீட்டுல உங்க பாக்கியம்   பாடாப்படுது.                   நாலு ஆம்பளை புள்ளைங்களுக்கு பிறகு, பிறந்த என்ன, பாராட்டி சீராட்டி வளத்து, படிக்கப் போனா பயலுவ பாப்பாங்க, வயலுக்கு போனா வாடிடுவேன்னு , பொத்தி வைச்சு வளத்து, என்னத்த கண்டீங்க, போங்க முடிஞ்சத சொல்லி என்ன லாபம்.                            தரகர் கொண்டு வந்த வரன்ல, இவன் குடிகாரன், இவுங்க கூட்டு குடும்பம், இவுங்கள பத்தி அப்படி சொல்லிக்கிற மாதிரி இல்ல, இது சரியாவராது, அந்த பையன் சரிஇல்ல, இவன் மாறு கண்ணு, இவன் வழுக்க, இவனுக்கு வயசு அதிகம்யா, என்று வந்த வரன்னை எல்லாம் ஒதுக்கியப்போ நினைச்சேன், அப்பா நம்பள நல்ல இடத்துல தான் கட்டி கொடுக

தொடர்வண்டி பயணம்

       தொடர்வண்டி பயணம் தொடர்வண்டி , ஒரு அருமையான பயண ஊர்தி. களைப்பில்லாமல் களிப்போடு பயணிக்கலாம். அதுவும் ஜன்னலோரப் பயணம்- ஆஹா அற்புதம். முன்பதிவு செய்ததால், சற்றும் பதட்டமில்லாமல், எனக்கான ஜன்னலோரம் இருக்கையில் அமர்ந்தேன், அதுவே பெரிய சாதித்த உணர்வை தந்தது. ரயில் நிலைய சலசலப்பு சற்று எரிச்சலடைய வைத்தது. அறிவிப்புகள் வந்த வண்ணம்   இருந்தது. நான் ஏறியதால் , அந்த அறிவிப்பும் அவசியமற்றதாக தோன்றியது. இந்த ரயில் தான் இந்த நிலையத்திற்கே கடைசி போல சிறு வியாபாரிகள் அவசர அவசரமாக தங்கள் பொருட்களை விற்பதில் தீவிரம் காட்ட, தேவையான தின்பண்டங்கள், உணவு, மற்றும் நீர் இருப்பதை என் பையைத் தொட்டு உறுதி படுத்திக் கொண்டு, ரயில் நகர்ந்து வேகமெடுக்க ஆவலாக இருந்தேன். வீட்டிலும், வரும் வழியிலும், ரயிலுக்கு காத்திருப்பிலும் சொல்ல நேரமில்லாத விஷயங்களை, அவசர அவசரமாக ஜன்னலோரமாக நின்றுக் கொண்டு, பயணம் செய்யப்போகும் , தன் மனைவியிடம் அவளது கணவன்   அளவளாவிக்   கொண்டிருந்தார். எனக்கு சிரிப்பு வந்தது, வீட்டில் இருக்கும் போது முகம் கொடுத்து கூட பேச மாட்டார்கள், இப்போது பார்க்கும் போது ஆத்மார்த்த தம்பதி போல் பா வன

SMART BOY SALEEM

                               SMART BOY SALEEM                                                 நான் தற்போது உங்களிடம் பதியும் பதிவு, நான் முதல்வராக இருந்த தருவாயில் நடந்த ஒரு சுவாரசியமான நிகழ்வு.                     சலீம் ஒரு LKG மாணவன். அவர்கள் வீட்டின் ஒரே செல்லப் பிள்ளை அவனது தந்தை துபாயில் பணிபுரிகிறார். சலீமை LKG சேர்பதற்கு மேள தாளம் மட்டும் இல்லை. அவர்கள் மொத்த குடும்பமும் , அவர்கள் ஏரியா மசூதி தலைவருடன் பள்ளிக்கு வந்திருந்தனர்.                    ஒரு பெரிய தாம்பாளத்தில் பழ வகைகளோடு என் அறைக்குள் வந்தனர். அவர்கள் குடும்பத்தில் அவ்வளவாக படித்தவர்கள் இல்லை போலும், அதனால் தான் சலீமுக்கு இந்த ஆர்ப்பாட்டம். சரி சேரப் போகும் மாணவன் எங்கே என்று கேட்டேன்,”மேடம் அவன் உள்ள வராம அவுங்க அம்மாவோடு கேட் அருகே அழுதுட்டு நிக்கறான்”, என்றார் அப்பையனின் தந்தை.                    எங்கள் பள்ளியில் LKG அட்மிஷன் போடும் மாணவர்களுக்கு ஒரு பரிசுப் பொருள் கொடுப்பது வழக்கம். அதனால் அந்த வருடம் வழங்க உள்ள ஜீப்பை எடுத்துக் கொண்டு நானே கேட் அருகே சென்றேன். அங்கு பெரும் சத்தத்தில் சலீம் அழுதுக் கொண்டி