Skip to main content

Posts

நான் சந்தித்த மனிதர்கள் சில நேரங்களில் சில மனிதர்கள்

                             நான் சந்தித்த மனிதர்கள்                                                                         சில நேரங்களில் சில மனிதர்கள்                      நம் வாழ்க்கைப் பயணத்தில், நாம் பல் வேறு மனிதர்களை சந்திக்கின்றோம். சில பேர் நமக்கு நல்ல பாடத்தை புகட்டுவர். அதாவது இவரைப் போல் இருக்க வேண்டும் அல்லது இவரைப் போல் இருக்க கூடாது என்று. அது போல் நான் சந்தித்த சில மனிதர்களை நான் இங்கு உங்களுடன் பகிர உள்ளேன்.                     நான் முதல்வராக பணிபுரிந்த பள்ளியின் பெற்றோர் அவர். நன்கு படித்து ஒரு நல்ல பதவியில் இருப்பவர், அவருடைய மனைவியும் நல்ல பதவியில் உள்ளார். அந்த நபர் மிகவும் அமைதியானவர், நான் சில சமயங்களில் நினைத்ததுண்டு “எப்படி இவ்வளவு அமைதியாக இருக்க முடிகிறது, சிரித்த முகத்துடன் எதிர் கொள்ள முடிகிறது என்று. நமக்கு சாதகமான விஷயமோ அல்லது இல்லையோ எது என்றாலும் சட்டென்று ரியாக்ட் செய்ய மாட்டார். அந்த விஷயத்தை நன்கு உள் வாங்கி process செய்து பின்பு   ரியாக்ட் செய்வார்.                   நம்மால் இயலவில்லையே, வடிவேல் கூறுவது போல் ,” நமக்கு இன்னும் பயிற்சி வேண
Recent posts

ONE DAY TRIP

                                      ONE DAY TRIP                    நான் தற்போது பகிர்வது , என் வாழ்வில் நடந்த ஒரு சுவாரஸ்யமான சம்பவம்.                    அப்போது எனக்கும் என் கணவருக்கும் 9 -6 PM பணி   நேரம். என் இரு மகன்களும், நான்கு மற்றும் இரண்டாம் வகுப்பு படித்து வந்தனர். அவர்களுக்கு சரியாக எட்டே முக்கால் மணிக்கு பள்ளி வாகனம் வந்துவிடும்.                    நங்கள் நான்கு குடித்தனம் உள்ள ஒரு காம்பவுண்ட் குடியிருப்பில் வசித்து வந்தோம். எங்கள் வீட்டிலிருந்து சில அடிகள் நடந்து ஓர்   சிறிய பெட்டிக்கடை அருகே அவர்களை நிறுத்துவிட்டு , நானும் என் கணவரும் எங்கள் பணிக்கு செல்வது வழக்கம்.                    அன்று வழக்கம் போல் கிளம்பி காலை டிபன் மதியம் LUNCH பாக்ஸ் நால்வருக்கும் பேக் செய்து, மாலையில் நான்கு மணிக்கு வரும் அவர்களுக்கு SNACKS   எடுத்து வைத்து விட்டு, மாலையில் வந்து அவர்கள் ஏதுவாக எடுத்துக் கொள்ள வசதியாக வீட்டு சாவியை வழக்கம் போல் ஒளித்து வைத்து விட்டு, அவர்களை அந்த பெட்டிக்கடை அருகே நிறுத்தி விட்டு நாங்கள் சென்றோம்.                    ஆனால் அன்று அவர்கள் மனதில் வேறு ஒர

SMART BOY SALEEM

                               SMART BOY SALEEM                                                 நான் தற்போது உங்களிடம் பதியும் பதிவு, நான் முதல்வராக இருந்த தருவாயில் நடந்த ஒரு சுவாரசியமான நிகழ்வு.                     சலீம் ஒரு LKG மாணவன். அவர்கள் வீட்டின் ஒரே செல்லப் பிள்ளை அவனது தந்தை துபாயில் பணிபுரிகிறார். சலீமை LKG சேர்பதற்கு மேள தாளம் மட்டும் இல்லை. அவர்கள் மொத்த குடும்பமும் , அவர்கள் ஏரியா மசூதி தலைவருடன் பள்ளிக்கு வந்திருந்தனர்.                    ஒரு பெரிய தாம்பாளத்தில் பழ வகைகளோடு என் அறைக்குள் வந்தனர். அவர்கள் குடும்பத்தில் அவ்வளவாக படித்தவர்கள் இல்லை போலும், அதனால் தான் சலீமுக்கு இந்த ஆர்ப்பாட்டம். சரி சேரப் போகும் மாணவன் எங்கே என்று கேட்டேன்,”மேடம் அவன் உள்ள வராம அவுங்க அம்மாவோடு கேட் அருகே அழுதுட்டு நிக்கறான்”, என்றார் அப்பையனின் தந்தை.                    எங்கள் பள்ளியில் LKG அட்மிஷன் போடும் மாணவர்களுக்கு ஒரு பரிசுப் பொருள் கொடுப்பது வழக்கம். அதனால் அந்த வருடம் வழங்க உள்ள ஜீப்பை எடுத்துக் கொண்டு நானே கேட் அருகே சென்றேன். அங்கு பெரும் சத்தத்தில் சலீம் அழுதுக் கொண்டி

அன்புள்ள அப்பாவுக்கு,

  அன்புள்ள அப்பாவுக்கு,               உங்க ஆச மவ பாக்கியம் எழுதுறேன். நா இங்க சுகமா இல்லப்பா. நம்ம ஒத்த புள்ளைய நல்ல இடத்துல கட்டிக்கொடுத்துட்டோம்னு சந்தோஷத்துல இருப்பீங்கன்னு தெரியும். ஆனா நா இதுவரைக்கும் உங்ககிட்டையும், அம்மாட்டயும் சொல்லாத விஷயத்த இப்போ சொல்றேன்.                           எம்மவ பாக்கியம்   கிடைக்க நா பாக்கியம்   பண்ணியிருக்கேன்னு, ஒரு நாளைக்கு நூறு தடவையாச்சம் சொல்வீங்க. இங்க புகுந்த வீட்டுல உங்க பாக்கியம்   பாடாப்படுது.                   நாலு ஆம்பளை புள்ளைங்களுக்கு பிறகு, பிறந்த என்ன, பாராட்டி சீராட்டி வளத்து, படிக்கப் போனா பயலுவ பாப்பாங்க, வயலுக்கு போனா வாடிடுவேன்னு , பொத்தி வைச்சு வளத்து, என்னத்த கண்டீங்க, போங்க முடிஞ்சத சொல்லி என்ன லாபம்.                            தரகர் கொண்டு வந்த வரன்ல, இவன் குடிகாரன், இவுங்க கூட்டு குடும்பம், இவுங்கள பத்தி அப்படி சொல்லிக்கிற மாதிரி இல்ல, இது சரியாவராது, அந்த பையன் சரிஇல்ல, இவன் மாறு கண்ணு, இவன் வழுக்க, இவனுக்கு வயசு அதிகம்யா, என்று வந்த வரன்னை எல்லாம் ஒதுக்கியப்போ நினைச்சேன், அப்பா நம்பள நல்ல இடத்துல தான் கட்டி கொடுக

புண்ணிய ஆத்மா

                  புண்ணிய ஆத்மா               கால்கள் நழுவி ஒரு பெரிய பள்ளத்துக்குள் விழுந்த உணர்வு வர, கால்கள் தன்னை மறந்து ஆடியதோடு அல்லாமல் உடம்பும் குப்பென்று வேர்த்தது. கண் முழித்த கோவிந்தராஜன் , தான் சாய்வு நாற்காலியில் அமர்ந்திருப்பதை உணர்ந்து சட்டென்று கண்களை திறந்தார். நல்ல வேலை அது கனவு.                நெற்றியில் ஏற்றி விட்ட கண்ணாடியை எடுத்து பொறுமையாக மடித்து, அதன் உறையில் வைத்தார். தன நெஞ்சினில் கவிழ்த்து வைத்திருந்த புத்தகத்தை எடுத்து மூடி, அருகில் வைத்து, நல்ல வாட்டமாக சாய்ந்தார். ஒரு 60 வயது மதிக்க தக்க உருவம், மாநிறம், சற்று பூசிய தேகம், தலையில் நரையை விட வழுக்கை அதிக இடத்தை பிடித்திருந்தது. பளிச்சென்று துவைத்த கை வைத்த பனியன், வெள்ளை வேஷ்டி, எப்போதும்   நெற்றியில் விபூதி கீற்று, அதன் நடுவே ஒரு சிறிய குங்குமப் பொட்டு.              அந்த குங்குமப் பொட்டும் அவரது மனைவிக்காக.” ஏங்க, வெறும் விபூதி மட்டும் பூசாதீங்க, நடுவில் கொஞ்சம் குங்குமம் வைங்க, அது உங்களுக்கு நல்லா   இருக்கும், இருங்க நா வைச்சி விடறேன்”, என்று கூறி மிகவும் கவனத்தோடு குங்குமப் பொட்டு   வைப்பாள் வத்

சுட்டிப் பையன் சுமேஷ்

                  சுட்டிப் பையன் சுமேஷ்                  நான் முதல்வராக இருந்த பள்ளியில் நடந்த ஒரு சுவாரசியமான சம்பவம். இது ஒரு சிறு சுட்டி பையன் சுமேஷ் என்பவனைப் பற்றியது.                 சுமேஷ் LKG யில் படித்துக் கொண்டிருந்தான். மிகவும் சுட்டி, ஆனால் பள்ளிக்கு வரும்போதே அழுதுக் கொண்டே தான் வருவான். வந்து ஒரு இரண்டு மணி நேரம் கழித்து, தன் சக நண்பர்களுடன் பேசி சகஜமாகிவிடுவான். அவன் ஒரு குறிப்பிட்ட இரு நண்பர்களுடன் சேர்ந்துக் கொண்டு மற்றவர் SNACKS யை சாப்பிடுவதும் , மதிய நேரத்தில் தூங்கும் பிள்ளைகளை சீண்டுவதையும் வழக்கமாக கொண்டான்.                வகுப்பளவில் வகுப்பாசிரியரே கண்டித்து வந்திருக்கிறார். இவர்கள் குறும்பு எல்லை மீறவும் பாதித்த குழந்தைகளின் பெற்றோரே   என்னிடம் வந்து முறையிட தொடங்கினர். விசாரிக்கலாம், அதற்கு முன்பு வகுப்பாசிரியரை ஒரு முறை கேட்கலாம் என்று எண்ணி , அவரை அழைத்து விசாரித்தேன். அவரும் ஆமோதித்தார். அவர் என்னிடம், “ மேம்   நீங்க STUDENTS இடம்   வந்து பொதுவா கண்டித்து செல்லுங்கள்”, என்றார்.                 இப்போது தான் அழுகையை நிறுத்தி பள்ளிக்கு வர ஆரமித்துள்ளார